கௌரவர்களின் தூண்





பாரத யுத்தம் முடியும் தருவாயில் 

வெற்றி ஒருவராக நிச்சயிக்கப்பட்ட சூழ்நிலையில் 

கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கும் நிலையில் 

கொதிக்கும் மனதுடன் வெறித்து பார்த்தான் 

அவன் 

குற்றுயிராய் துரியோதனன் 

வேதனையில் கிருபரும் கிருதவர்மரும் 

வெறியுடன் அஸ்வத்தம்மா 

உயிரற்ற உடல்களோ எண்ணில் அடக்கா 

இதை தவிர அங்கே வேறு ஒன்றும் இல்லை 

11 அக்குரோணி சேனைகளும் பரலோகத்தில் 


கவசம் கழற்றாமல் கவனமாய் நோக்கினான் 

பாண்டவர் பாசறையை 

வெற்றிக்களிப்பில் மிதமிஞ்சிய ஆனந்தத்துடன் 

வீரர்கள் நடனமாடி கொண்டுஇருந்தார்கள் 


கோபக்கனலில் தான் நிலையை 

மறந்தான்.

 ஏமாற்றம் அவன் வாழ்வில் புதிதல்ல.


மாவை கரைத்து கொடுத்து பால் என்று ஏமாற்றிய தாய் 

வளர்த்த பருவத்தில் அர்ஜுனனுக்கு சொல்லி கொடுத்த 

அஸ்திரத்தை தனக்கு மறுத்த தந்தை 


தன்  வாழ்வில் நிறைய ஏமாற்றங்களை 

அவன் சந்தித்தாலும் துரியோதனனுக்கு 

எந்த ஒரு ஏமாற்றத்தையும் தர 

அவன் விருப்ப வில்லை.


தெரித்தோ தெரியாமலோ நடத்தை விதிகள் 

மீறாமல் இந்த யுத்தம் நடக்கவில்லை 


அதனால் 

தெரிந்தே அறிந்தே இன்று துணைக்கு இருவர் கொண்டு 

வீதிகளை மீறிய யுத்த செய்ய புறப்பட்டான் 

கிருபியின் புதல்வன்.


வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் 

விரைந்தான் பாண்டவர் பாசறையை நோக்கி 


நடுவே அவனை கட்டிப்பிடித்து அணை 

போட்டது காவல் தெய்வம்.

சண்டை போடாமல் சாதுர்யமாய் செயல்பட்டான்.


தன் யோகத்தால் யாக குண்டத்தை உருவாக்கி

அதில் தன்னயே ஆகுதியாக்க முயன்றான்.


அவனை தடுத்த தெய்வம் சிரித்தது 

அவன் சிந்தையில் உதித்தித்து இதுவும் 

சிவனின் விளையாட்டு என்று 


ருத்திரரின் ஆவி அவன் மேல் படர்ந்தது 


புதிய பலத்துடன் புத்துயிர் பெற்றான் 

துரோணா புத்திரன்.


காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுவது 

போல் பாண்டவர் பாசறையில் அவன்.


வெறிகொண்ட வேங்கையை 

மதம்கொண்ட யானையை 


விடிய விடிய வேட்டையாடினான் 




மிஞ்சம் சொஞ்சம் இல்லாமல் முழுவதும் 

பிணக்குவியலை பார்த்தபின்பே ஒயித்தான்.


சொர்க்கத்திற்கு செல்ல தயாராக இருந்த 

துரியோதனிடம் நற்செய்தி சொன்னான்.


இங்கே மூவர்,அங்கே எழுவார்.

இதுவே யுத்தத்தின் முடிவு என்றான்.


இந்திரனாக தன்னை நினைத்து  ஆனந்த களிப்பில் 

எமலோகம் சென்றான் காந்தாரியின் புதல்வன்.


வெற்றிக்களிப்பில் தன வாள் உயர்த்தி 

வீரம் நிறைத்த வார்த்தைகள் பேசி 

சொந்தம் பந்தம் ஏதும் இன்றி 

கானகம் நோக்கி புறப்பட்டது 

கௌரவர்களின் தூண்.



 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்